தலைவர் 171 படத்தின் கதை தழுவல்-ஆ! அதுவும் எந்த படம் தெரியுமா
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ள திரைப்படம் தலைவர் 171. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்தது.
மேலும் வருகிற 22ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறதாம்.
விக்ரம், லியோ படங்களுக்கு எப்படி டைட்டில் டீசர் வெளிவந்ததோ, அதே போல் செம மாஸாக ரஜினிக்கும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் லோகேஷ். கண்டிப்பாக இந்த டைட்டில் டீசர் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தலைவர் 171 படத்தின் கதை, ஹாலிவுட் திரைப்படமான The Purge படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என பிரபல பத்திரிகையாளர் தகவலை பகிர்ந்துள்ளார்.
ஹாலிவுட்டில் James DeMonaco இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் The Purge. இப்படத்திலிருந்து இன்ஸ்பைர் ஆகி தான் தலைவர் 171 படத்தின் கதையை லோகேஷ் எழுதியுள்ளார் நீ சொல்லப்படுகிறது.
ஏற்கனவே லியோ படம் படம் ஹாலிவுட்டில் வெளிவந்த A History of Violence படத்தின் இன்ஸ்பிரேஷன் என்பதை நாம் அறிவோம். அதே போல் தான் தலைவர் 171 படமும் The Purge படத்தின் இன்ஸ்பிரேஷனா என பொறுத்திருந்து பார்ப்போம்.
- Aishwarya Rajinikanth
- happy birthday rajinikanth
- hbd thalaivar rajinikanth
- jailer rajinikanth
- lal salaam rajinikanth
- Lokesh Kanagaraj
- rajinikanth
- rajinikanth and aishwarya
- rajinikanth grand entry
- rajinikanth jailer speech
- rajinikanth latest speech
- rajinikanth movie
- rajinikanth movies
- rajinikanth new movie
- rajinikanth next movie
- rajinikanth songs
- rajinikanth speech
- rajinkanth speech
- rajnikanth
- Superstar Rajinikanth
- superstar rajinikanth speech