19 8
ஏனையவை

சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து

Share

சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த மூன்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில விமானங்கள் தாமதமானதாகவும் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு விமானமும் அதன் விமான பறப்பை முடித்த பிறகு தொழில்நுட்ப மதிப்பீட்டு சோதனைக்கு உட்படுகிறது என்று அதிகாரி விளக்கினார்.

சில விமானங்களில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த செயல்முறை நேரம் எடுக்கும். பாதிக்கப்பட்ட மூன்று விமானங்களும் தொழில்நுட்ப பராமரிப்புக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன, என்றார்.

இதன் காரணமாக இன்று பிற்பகல் இந்தியாவின் (india) சென்னைக்கு (chennai) புறப்படவிருந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-123 மற்றும் சென்னையில் இருந்து இரவு 10:15 மணிக்கு கட்டுநாயக்கவிற்கு வரவிருந்த UL-124 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலதிகமாக, விமானம் UL-196, இந்தியாவின் புது டெல்லியில் (newdelhi) இருந்து கட்டுநாயக்கவை இரவு 10:10 மணிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியாவின் (australia) மெல்போர்னில் இருந்து இரவு 10.20 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தகவல் அளித்துள்ளதுடன், அவர்கள் தமது பயணத்தை அடைய உதவுவதற்காக மாற்று விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...