உலகம்ஏனையவைசெய்திகள்

மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! வீடியோவில் பேசிய முகேஷ் அம்பானி

Share
24 659a5e3524a51
Share

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி, தமிழகத்தில் 35,000 கோடிமுதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.

அத்துடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டன. மேலும், தமிழக அரசுடன் புதிய நிறுவனங்கள் தொடங்கவும், நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், முதலீடுகளை அதிகரிக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35,000 ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மாநாட்டில் முகேஷ் அம்பானி கலந்துகொள்ளவில்லை. எனினும் அவர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.35,000 கோடி முதலீடு செய்துள்ளது.

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...