பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை!!

law

பொலிஸ்மா அதிபர் சீ.டீ விக்ரமரத்னவை, உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தடுப்பு காவலில் உள்ளவர்கள் பல்வேறு விசாரணைகளுக்காக வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டில் மரணிக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு வழிகாட்டல் கோவையை தயாரிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

எனினும், அதனை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அடுத்த மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version