மகனுடன் தற்கொலை முயற்சி! – தாய் கைது

arrest police lights

வத்தளை , ஹெந்தல – கதிரான பாளத்துக்கு அருகில் களனி ஆற்றுக்குள் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, தானும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முற்பட்ட பெண்ணொருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இப்பெண் நேற்று இரவு 7.30 அளவில் தனது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, வீதியால் பயணித்த நபரொருவர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் ஹெந்தலை காவலரணில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வத்தளை பொலிஸாரினால் கைதுசெய்து அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க படகுகள் மூலம் கடற்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version