24 664d68258e7ab
ஏனையவை

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி இவர் தானா.. சென்சேஷனல் நடிகையுடன் முதல் முறை கூட்டணி

Share

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி இவர் தானா.. சென்சேஷனல் நடிகையுடன் முதல் முறை கூட்டணி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ் கே 23 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அமரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் எஸ்கே 23ல் நடிக்கவுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட திரையுலகம் மூலம் பிரபலமான இளம் நடிகை ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார்.

ஆனால், இப்படத்தில் முதன் முதலில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவிருந்தது ராஷ்மிகா மந்தனா தானாம். அப்போது ராஷ்மிகாவின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் அவருக்கு பதிலாக ருக்மிணி தேர்வாகியுள்ளார் என கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக டான் படத்தை இயக்கிய இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...