Anura Kumara Dissanayake
ஏனையவை

விதையுண்ட ஆத்மாக்களின் பலத்தோடு தமிழ்த்தேசியப் பயணம் தொடரும்: சிறீதரன் உறுதி

Share

விதையுண்ட ஆத்மாக்களின் பலத்தோடு தமிழ்த்தேசியப் பயணம் தொடரும்: சிறீதரன் உறுதி

மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியல் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நேற்றையதினம் (16.11.2024) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அவரது செய்திக் குறிப்பிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தங்கள் வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.

கடந்த 15 வருடகால அரசியற் பயணத்தில் என் ஆத்ம பலமாகவும், அரசியற் பலமாகவும் தம் உடனிருப்பை வழங்கி, கொள்கையின்பாற்பட்ட பயணத்தின் பங்குதாரர்களாக இருந்த உங்கள் ஒவ்வொருவரது கரங்களையும் நன்றியோடு பற்றிக்கொள்கிறேன்.

திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலைகளின் உள்ளிருந்தவாறே, தமிழ்த்தேசியத்தின் இருப்புக்காய் போராடத் தலைப்பட்ட என்னையும், எனது பாதையையும் எமது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற நிறைவே, எனது அரசியற் பணியையும் பயணத்தையும் இன்னும் வலுவூட்டும்.

என்னுள் நானாக இருந்து என்னை இயக்கும் எங்கள் தேசத்தில் விதையுண்ட ஆத்மாக்களின் அரூப பலத்தோடு, என் மக்களுக்கான தமிழ்த்தேசியப் பயணத்தை தடையற்றுத் தொடர்வேன்.

நிலையிழக்க வைத்த அலைகளின் நடுவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு கிடைத்த இந்த வெற்றி கார்த்திகையின் கனதியை உறுதி செய்யட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...