ஏனையவை

கனடா விவகாரத்தில் சுமந்திரனின் சதியை சபையில் அம்பலப்படுத்திய சிறீதரன்

Share
1 42
Share

கனடா விவகாரத்தில் சுமந்திரனின் சதியை சபையில் அம்பலப்படுத்திய சிறீதரன்

கடந்த வாரம் சென்னைக்கு சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான் தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு, கனடாவில் இருந்து இயங்கும் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுடன் கலந்துரையாடுவதற்காக சென்றமை தான் காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என் மீது போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எனக்கு எந்த தடை செய்யப்பட்ட அமைப்பையும் தெரியாது. நான் யாருடனும் கலந்துரையாடவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

தனக்கு எதிராக போலியான பிரசாரங்களை பரப்பும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த 10ஆம் திகதி தமிழ்நாட்டில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நான் இந்தியாவுக்கு பயணமாகியிருந்தேன். எனினும், எனது கடவுச் சீட்டுக்களில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்து என்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில் எனது கடவுச்சீட்டில் குறைபாடு உள்ளதாகவும், பயங்கரவாத குற்றத் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் விசாரணைகளுக்கு என்னை உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள் எனக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

எனினும், என்னுடன் குறித்த மாநாட்டிற்கு வருகைத் தந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் சில முயற்சிகளுக்குப் பிறகு இறுதி நேரத்தில் பயணிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நீதிமன்ற கட்டளைகள் ஏதுமின்றி, சபாநாயகரின் ஆலோசனை ஏதுமின்றி எனக்கு பயணத்தடை உள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டமை திட்டமிட்ட வகையிலான சிறப்புரிமை மீறல் என்றே நான் கருதுகின்றேன். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு எதிரான அடிப்படை சிறப்புரிமை மீறல் தொடர்பில் நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

அத்துடன் இதன் பின்னணி தொடர்பிலும் நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “இலங்கையில் தடை செய்யப்பட்ட, கனடாவில் இருந்து இயங்கும் அமைப்புடன் சிறீதரன் பேச முனைந்ததாகவும், அதற்காகத்தான் அவர் சென்னை செல்ல இருந்ததாகவும், இதன் காரணத்தினால் தான் சிறீதரரை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சென்னையில் என்னைப் பார்த்த சுமந்திரன் இது குறித்து எதுவும் கூறவில்லை. ஆனால், விசாரித்து அறிந்த போது, தான் ஊடகங்களில் இவ்வாறு செய்திகள் வந்ததை வைத்து கூறியதாகவும், இது போன்ற ஊகத்தால் விமான நிலையத்தில் சிறீதரனை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த அஸ்மின், தன்னுடைய முகநூலில் இட்டுள்ள ஒரு பதிவில், நானும், இந்தியாவின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, கடந்த நாட்களில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படவில்லை. அது ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்கும், அஸ்மினின் முகநூல் பதிவிற்கும் இடையில் தொடர்பிருப்பதாக நான் நம்புகின்றேன். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என்னை சென்னை செல்ல விடாமல் செய்ய மேற்கொள்ளப்பட்ட சதியாகவே இதை கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இதன்போது உறுதியளித்தார்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...