ஏனையவை

சவுதி கட்டப்போகும் பிரமாண்ட உலககிண்ண கால்பந்தாட்ட மைதானம் : வெளியானது மாதிரி

5 45
Share

சவுதி கட்டப்போகும் பிரமாண்ட உலககிண்ண கால்பந்தாட்ட மைதானம் : வெளியானது மாதிரி

2034ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக சவுதி அரேபியாவில் கட்டப்படும் புதிய கால்பந்து மைதானத்தின் மாதிரி திட்டம் நேற்று(18) முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

இந்த மைதானம் 2029ல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2034 FIFA உலகக் கோப்பையை நடத்த சவுதி அரேபியா(saudi arabia) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், 2023 ஆம் ஆண்டுக்கான காலக்கெடுவிற்கு முன்னதாக, நாட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலத்தை முறையாகச் சமர்ப்பித்த ஒரே நாடு சவுதி அரேபியா மட்டுமே.

போட்டிகள் நடைபெறும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும், 2034ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 48 அணிகள் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2034 பிஃபா உலகக் கோப்பை சவுதி அரேபியாவில் 15 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை குறிவைத்து ரியாத் நகரில் புதிய மைதானம் கட்ட சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மைதானத்தின் திட்டம் குறித்த காணொளி நேற்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

92 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் இந்த மைதானம் கட்டப்படவுள்ளது. விளையாட்டு வளாகம் மைதானத்தின் உட்புற அரங்கையும், ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளத்தையும் சுற்றியுள்ள பசுமையான நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...