ஏனையவை

ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கலாம்… ஜேர்மனி அச்சம்: கசிந்த ஆவணங்கள்

1 4 scaled
Share

ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கக்கூடும் என்ற அச்சத்தில், அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிவருவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போர் துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், ரஷ்யா அடுத்த ஆண்டு நேட்டோ கூட்டணி நாடுகள் மீது தாக்குதலை விரிவாக்கலாம் என்றும், அதனால், மூன்றாம் உலகப்போர் துவங்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் ஜேர்மனி கருதுவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் செய்தித்தாளான Bild செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்கள் நேட்டோ மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகிவருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், பிரச்சினை விரைவில் பெரிதாகலாம் என்றும், ஆகவே, பல்லாயிரக்கணக்கான ஜேர்மன் வீரர்கள் போர்க்களத்துக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே 31 நாட்டு வீரர்கள் பங்கேற்கும் நேட்டோ போர்ப்பயிற்சி ஒன்றிற்காக பிரித்தானியாவும் ஆயிரக்கணக்கான வீரர்களை தயாராக்கிவருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...