14 11
ஏனையவை

ரஷ்யாவின் பாரிய தாக்குதலில் இருளில் மூழ்கியது உக்ரைன்

Share

ரஷ்யாவின் பாரிய தாக்குதலில் இருளில் மூழ்கியது உக்ரைன்

உக்ரைன் (ukraine)மின்கட்டமைப்பை குறிவைத்து 120 ஏவுகணைகள், 90 டிரோன்களை ஏவி ரஷ்யா(russia) நடத்திய பாரிய தாக்குதலில் உக்ரைன் இருளில் மூழ்கியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் , டிரோன்கள் ஆகியவற்றை உக்ரைன் பாதுகாப்புப்படை சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், சில ஏவுகணைகள், டிரோன்கள் இலக்குகளை தாக்கி அழித்தன.

தலைநகர் கீவ் மற்றும் டொனெட்ஸ்க், எல்விவ் மற்றும் ஒடேசா உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் மின் உற்பத்தி உள்கட்டமைப்புகள் பெரும்பாலான எண்ணிக்கையில் சேதமடைந்தன என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் ரஷ்யாவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவே மிகப்பெரியதாகும் என்று கூறப்படுகிறது.

“உக்ரைனிய இராணுவ-தொழில்துறை வளாகத்தை ஆதரிக்கும் அத்தியாவசிய மின்சார உள்கட்டமைப்பை” குறிவைத்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் மோல்டோவா, ரஷ்யா வேண்டுமென்றே குளிர்காலத்தில் உக்ரைனில் உறைபனி நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டின, உக்ரைனிய எம்பி ஒருவர் பிபிசியிடம், கடந்த ஆண்டு குளிர்காலத்திற்கு முன்னதாக ரஷ்யா இதே போன்ற தாக்குதல்களை நடத்தியதாக கூறினார்.

உக்ரைனின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனம், தாக்குதல்களால் அதன் வெப்ப ஆற்றல் ஆலைகளுக்கு “குறிப்பிடத்தக்க சேதத்தை” ஏற்படுத்தியதாகவும், அதன் விளைவாக சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறியது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...