வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தரின் அறை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி திருமதி றதினி காந்தநேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த தாதிய உத்தியோகத்தரின் அறையிலிருந்து தாதிய உத்தியோகத்தரின் பணம், மருத்துவமனை அபிவிருத்தி சங்க பணம் என மொத்தம் ஒரு இலட்சத்து 837 ரூபாவும் தாதிய உத்தியோகத்தரின் பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment