ஏனையவை

சம்பிரதாய அரசியல்வாதிகளை தூக்கியெறிந்த மக்கள் : பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு

7 36
Share

சம்பிரதாய அரசியல்வாதிகளை தூக்கியெறிந்த மக்கள் : பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறு சம்பிரதாய அரசியல்வாதிகள் பலரை அரசியல் செயற்பாட்டில் இருந்து நீக்கிவிடும் வகையில் அமைந்துள்ளதாக பவ்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரான தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தேர்தல் பிரசார காலப்பகுதியில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தபோதும் தேர்தல் தினத்திலும் அதற்கு பின்னரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை.

அதேபோன்று தேர்தல் சட்ட திட்டங்களை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka), காவல்துறையினர் மிகவும் உறுதியாக கடைப்பிடித்து வந்தனர்.

தேர்தல் பிரசார செலவு சட்டத்தின் கீழ் இடம்பெற்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தல் என்பதால் இந்த தேர்தல் விசேட தேர்தலாக கருதப்படுகிறது.

மேலும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல், தேர்தல் கலாசாரத்தை முற்றாக அரசியல் வரைபடத்தில் இருந்து அகற்றிவிடவும் சம்பிரதாய அரசியல்வாதிகள் பலரை அரசியல் செயற்பாட்டில் இருந்து நீக்குவதற்கும் இந்த தேர்தல் பெறுபேறு அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த தேர்தல் மிகவும் தீர்மானமிக்கதாக அமைந்துள்ளது.

அதேபோன்று தேர்தல் காலத்தில் அரச அதிகாரம் அரச சொத்துக்களை துஷ்பிரயாேகம் செய்வது அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் காணக்கூடியதொன்றாக இருந்து வந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றாலும் அரச அதிகாரங்கள் மற்றும் அரச சொத்துக்கள் பாவனை மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால் இந்த தேர்தலில் அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களின் பாவனை பயன்படுத்தப்படாத மட்டத்திலேயே இருந்து வந்தது. அதனால் நீதி மற்றும் சுதந்திரமான தேர்தல் ஒன்றுக்கு தேவையான அடிப்படை அளவுகோளில் நூற்றுக்கு 80வீதத்துக்கும் அதிகம் பூரணப்படுத்துவதற்கு முடியுமான தேர்தலாகவே இந்த தேர்தலை நாங்கள் காண்கிறோம்.

மேலும் இந்த தேர்தல் பெறுபேறு மூலம் வீழ்ச்சியடைந்துள்ள தேர்தல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கும் அதேபோன்று நாடாளுமன்றத்தின் உண்மையான பொறுப்பை புதிய நாடாளுமன்றத்துக்கு மேற்கொள்ள முடியுமாகும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தேவைப்படாது என நாங்கள் நினைக்கிறோம்“ என தெரிவித்தார்.

Share
Related Articles
17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...