அநுரவிற்கு முன்னரே இந்தியா விரையும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இந்தியாவிற்கு (India) விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயமானது, இன்று (21) ்மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் போது, ரணில் விக்ரமசிங்க இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர் கல்வி நிறுவனத்தில் விரிவுரை ஒன்றையும் நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை (22 ஆம் திகதி) மாலை 6 மணிக்கு மேல்நிலைக் கல்வி நிறுவன மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கும் இந்த விரிவுரை நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.