17 16
ஏனையவை

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரணில்!

Share

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரணில்!

கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மதுவரிச் சட்டத்திற்கு முரணான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

கண்டியில் (Kandy) மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இருவரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி, நிதியமைச்சின் செயலாளர், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 39 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், கலால் வரிச் சட்ட விதிகளைத் தவிர்த்து எதேச்சதிகாரமான மற்றும் அநீதியான முறையில் அந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 7 1
ஏனையவை

தையிட்டியில் தொடரும் பதற்றம்: சிலையுடன் வந்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர் – பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று யாழ். பல்கலைக்கழக...

images 6 1
ஏனையவை

ஜனவரி 5 முதல் மழை அதிகரிக்கும்: வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் ஜனவரி 05-ஆம் திகதி முதல்...

26 6958b2e786c0e
ஏனையவை

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை: 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் கடற்கரையில் அனுஷ்டிப்பு!

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்...

image 339b4818b7
ஏனையவை

மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிக்கத் திட்டம்: மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி – ஜனக ரத்நாயக்க கடும் சாடல்!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளைக் காரணம் காட்டி, மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார...