ஏனையவை

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்

Share
22 5
Share

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நவம்பர் 21ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்பிப்பார் என தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை தொடர்பாடல் தணைக்களம் இன்று (16.11.2024) குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33(A) பிரிவின் கீழ், நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றதில் முன்வைப்பதற்கும், நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக நாடாளுமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார்.

இங்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தனது அரசாங்கத்தின் பார்வை பற்றிய விரிவான பகுப்பாய்வை நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளார்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...