5 48
ஏனையவை

யாழ் – பலாலியில் 34 வருடங்களின் பின்னர் மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட ஆலயம்

Share

யாழ் – பலாலியில் 34 வருடங்களின் பின்னர் மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட ஆலயம்

வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழ் – பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் செல்ல இன்று (20.11.2024) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று(20) முதல் பலாலி, வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆலயத்துக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதையூடாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அநுர அரசாங்கத்தில் யாழ். வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலைமையகமத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றிலிருந்து (18) பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...