போக்குவரத்து அபராதங்களை இனி இணையவழியில் செலுத்தலாம்: ஜனவரி 15 முதல் நாடு முழுவதும் அமல்!

1751373259 fine

எதிர்வரும் ஜனவரி 15-ஆம் திகதிக்குப் பின்னர், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ‘Govpay’ செயலி அல்லது இணையதளம் ஊடாகச் செலுத்தும் வசதி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இது குறித்து, சாரதிகள் இனி பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லாமல், Govpay தளம் ஊடாக நேரடியாக அபராதங்களைச் செலுத்த முடியும்.

ஓட்டுநர்கள் பொலிஸாருக்கு நேரடியாகப் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இது பொலிஸ் துறையில் லஞ்சம் மற்றும் ஊழலைக் குறைக்க உதவும். போக்குவரத்துப் பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு இதற்கான டிஜிட்டல் வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.

லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் எனச் சுட்டிக்காட்டிய அவர், புதிய முறையினால் பொலிஸார் மீதான தேவையற்ற குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த டிஜிட்டல் மயமாக்கல் மூலம் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தரவுகள் துல்லியமாகப் பேணப்படுவதுடன், பொதுமக்களுக்கான காலதாமதமும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version