வேகக்கட்டப்பாட்டை இழந்து வீதியால் சென்றவர்கள் மீது மோதி வாய்க்காலுக்குள் பாய்ந்து ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்ற நிலையில் ஓட்டோவின் சாரதி தப்பியோடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி 5 அடி வான் பகுதியில் வேகக்கட்டப்பாட்டை இழந்த ஓட்டோ வீதியால் சென்றவர்களை மோதித் தள்ளி வாய்க்காலுக்குள் பாய்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவரும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
ஓட்டோ நீரில் மூழ்கிய நிலையில் அதனை செலுத்திவந்த சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என அங்கு நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment