யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை நேற்று (29) உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . குழந்தை வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் சடலத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று (30) சட்ட வைத்திய அதிகாரி விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment