மீண்டும் தேசிய ரீதியில் சாவகச்சேரி இளைஞன் சாதனை

311991444 8177166302356111 4224601258428373390 n e1667120614346

தேசிய ரீதியான வலு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர், squat பிரிவில் 335 கிலோ கிராமையும், benchpress பிரிவில் 183 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 275 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.

இதில் squat மற்றும் deadlift , benchpress ஆ௧ிய மூன்று பிரிவுகளிலும் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 793 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் நிலை நாட்டியுள்ளார் .

அத்துடன் சற்குணராசா புசாந்தன் வருகின்ற டிசம்பர் மாதம் நியூசிலாந்தில் நடைபெறுகின்ற சர்வதேச வலு தூக்கல் போட்டியில் பங்குபற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version