26 695bb8ae5b42a
ஏனையவை

இலஞ்சம் பெற்ற நுவரெலியா ASP மற்றும் கல்முனை பெண் பொலிஸ் சார்ஜென்ட் அதிரடி கைது!

Share

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடம் கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஒருவரும் பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் திருமணமாகாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது வீட்டிலிருந்து பணிக்குச் செல்வதற்கான விசேட அனுமதியை மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரிடம் பெறுவதற்குப் பரிந்துரை செய்யுமாறு கோரியுள்ளார். இதற்குப் பிரதிபலனாக குறித்த உயர் அதிகாரிகள் இலஞ்சம் கோரியுள்ளனர்.

இப்பரிந்துரையை வழங்க 72,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களைப் பல சந்தர்ப்பங்களில் இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நுவரெலியா ASP அலுவலகத்தில் கடமையாற்றும் குறித்த அதிகாரி இன்று காலை 10.50 மணியளவில் கைது செய்யப்பட்டார். கல்முனை ASP அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் சார்ஜென்ட் இன்று மாலை 3.00 மணியளவில் அவரது அலுவலகத்திலேயே வைத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் முறையே நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பொலிஸ் துறையினரே சக ஊழியரிடம் இலஞ்சம் பெற்ற சம்பவம் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...