இளம் தாயின் கொடூர செயல்

24 662efba369031

இளம் தாயின் கொடூர செயல்

தென்னிலங்கையில் இளம் தாய் ஒருவரின் கொடூர செயற்பாடு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, மஹாபாகே பிரதேசத்தில் நேற்று 9 மாத குழந்தையை காணவில்லை என தந்தை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் வசித்த வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணையின் போது, ​​குழந்தையை கிணற்றில் வீசி தாயே கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தாயார் ராகம, ஹலந்துருவ வீதியில் வசிக்கும் 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version