” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்படக்கூடாது.” – என்று முக்கியமான பௌத்த பீடங்களில் ஒன்றாக அஸ்கிரிய பீடம் வலியுறுத்தியுள்ளது.
கண்டி, தலதாமாளிகைக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வழிபாடுகளின் பின்னர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் மற்றும் சங்க சபையினருடன் அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து கலந்துரையாடினார்.
இதன்போதே அஸ்கிரிய பீடத்தின் சார்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
” 13 ஆவது திருத்தச்சட்டம் அமுலில் உள்ளது. அதன் அச்சுறுத்தல் நிலைமை அனைவருக்கும் தெரியும். எனவே, பெயரளவிலான ஜனாதிபதி முறைமை உருவானால் அது பாதகமாக அமையக்கூடும். எனவே, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீடிக்கப்பட வேண்டும். அதிகாரங்களை மட்டுப்படுத்தலாம்.” எனவும் அஸ்கிரிய பீடத்தின் சார்பில் நீதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ள சந்தேக நிலை பற்றியும் தேரர்கள், நீதி அமைச்சரிடம் விளக்கம்கோரி, தெளிவுபெற்றனர்.
#SriLankaNews