முன்னணி கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவில் வலம்வரும் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமான நிலையில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில், நேற்று காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் முதல்முறையாக காஜல் கர்ப்பமாக இருப்பதாய் எமோஜியுடன் அறிவித்து இருந்தார்.
தற்போது கர்ப்பமான தோற்றத்துடன் காஜல் தனது கணவருடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
#CinemaNews