ஏனையவை

சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலக்கவுள்ள யாழ். சிறுமி பிரியங்கா

Share
4 34
Share

சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலக்கவுள்ள யாழ். சிறுமி பிரியங்கா

இந்திய தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியில் யாழ்ப்பாணம் (Jaffna) – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற 11 வயதுடைய சிறுமி போட்டியிடவுள்ளார்.

குறித்த போட்டியின் போட்டியாளர்களின் தெரிவுகள் யாவும் நிறைவுபெற்ற நிலையில் பாடல் போட்டியானது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பி.ப 6.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

குறித்த சிறுமி சிறுவயது முதல் இசையில் ஆர்வம் காட்டி வந்தநிலையில் கடந்த தை மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வின் மூலம் முன்னணி பாடகராக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் அவரது குரலின் இனிமை மற்றும் பாடல் திறமை போன்ற காரணங்களால் மேடை இசை நிகழ்வுகளில் அவருக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியாளர்கள் தெரிவில் கலந்து கொண்டு அவரும் போட்டியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அவரது promoவும் தற்போது வெளியாகி உள்ளது. குறித்த சிறுமிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...