19
ஏனையவை

கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் போர்க்கப்பல் தொழிற்சாலை!

Share

கொழும்பு துறைமுகத்தில் போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் தொழிற்சாலையை நிறுவ இந்தியா தயாராகி வருவதாக முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்களை திசைக்காட்டி அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களில் முக்கியமானவர்கள் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடன் தனிப்பட்ட தொடர்புகளை கொண்ட பல அமைச்சர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை ஏழு என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இந்திய ஊடகங்கள் 10 என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இந்திய இராணுவ ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை நிறுவுவது குறித்த விவரங்களை இந்திய பாதுகாப்புச் செயலாளரே இந்திய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாகவும் புபுது ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...