18 இலட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
17 மாநிலங்களில் 358 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக குறித்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி அதிகளவானோரைக் கொண்ட கூட்டங்கள் மற்றும் இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
18 இலட்சத்து 10 ஆயிரத்து 83 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 4 இலட்சத்து 94 ஆயிரத்து 314 ஒக்சிஜன் படுக்கைகள், 1 இலட்சத்து 39 ஆயிரத்து 300 தீவிர சிகிச்சைப் படுக்கைகள் என்பன நாடு முழுவதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IndiaNews