ஏனையவை

அடுத்த ஆண்டு சிவகார்த்திகேயன் கைவசம் இத்தனை படங்களா?

Share
முதல் முறையாக சென்சேஷன் நடிகையுடன் ஜோடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
முதல் முறையாக சென்சேஷன் நடிகையுடன் ஜோடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
Share

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கான ஒரு இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தக்கவைத்திருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த ஆண்டு கைவசம் உள்ள திரைப்படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே பெரியளவில் காணப்படுகிறது.

இப்படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14 அல்லது சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக, இன்று நேற்று நாளை படத்திற்கு பின் இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் அயலான். Alien-யை முக்கிய கதாபாத்திரமாக காட்டப்படவுள்ள அயலான் படத்தை பெரிய பொருட்செலவில் எடுத்துள்ளனர்.

இந்தப்படமும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் முதல்முறையாக இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் இயக்கி வருகிறார். இப்பொது படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படமும் 2022 வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

மேலும் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தை கமல் தயாரிக்கவுள்ளார். இப்படமும் 2022 ஆம் ஆண்டு தொடங்கலாம் என கூறப்படுகிறது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி தொடங்கும் என்றும் அதன் அறிவிப்பும் விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...