ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம்: கடத்தல்காரர்களிடம் சிக்க வேண்டாமென எச்சரிக்கை

24 6635844253c07

ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம்: கடத்தல்காரர்களிடம் சிக்க வேண்டாமென எச்சரிக்கை

ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம் தருவதாக மோசடி செய்யும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களிடம் இலங்கையர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்ய இராணுவத்தில் பணிபுரிந்து வெளியேறி, மிகவும் கஷ்டங்களை அனுபவித்த, நாட்டின் ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மற்றுமொரு குழுவினர் தமது கசப்பான அனுபவங்களை நேற்று (03) வெளிப்படுத்தியுள்ளனர்.

மனித கடத்தலில் சிக்கிய இந்த குழுவினர் தாம் அனுபவித்த துயரங்களை வெளிப்படுத்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

ரஷ்ய இராணுவத்தில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்து வாக்னர் கூலிப்படையில் பணிபுரிய அந்நாட்டுக்கு சென்றபோது வாக்னர் கூலிப்படையின் முன் வரிசையில் பணியாற்றவே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ரஷ்யாவில் அதிக சம்பளம், நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் தருவதாக அழைத்துசென்றவர்கள் கூறியும், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பல மாதங்களாக சம்பளம் கூட தரவில்லை என்றும் கூறியுள்ளனர்.

அந்நாட்டில் போர் முனையில் இருக்கும் இலங்கை இராணுவ வீரர்கள் அந்நாட்டு போர் முனையில் இருந்து பல காட்சிகளை தொடர்ச்சியாக எங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ஏமாற்றிய இந்த மோசடியில் இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர் உட்பட பலர் செயற்படுகின்றனர் என்றும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version