6 8
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் மாஸ் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது, மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என இரண்டு படத்தில் நடித்துள்ளார்.

இதில், விடாமுயற்சி படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் பட ரிலீஸ் தள்ளிப்போனதாக தயாரிப்பு குழு அறிவித்துவிட்டார்கள். இதனால் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திற்காக சுத்தமாக தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார்.

இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் குட் பேட் அக்லி படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்றை கல்யாண் மாஸ்டர் பகிர்ந்துள்ளார்.

அதில், ” அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் உள்ள பாடலில் செமையாக ஆட்டம் போட்டுள்ளார். அவரது நடனத்தை கண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் ஆச்சிரியம் அடைந்தனர்.

கண்டிப்பாக இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் ஆக அமையும். இதை தவிர்த்து என்னால் வேற எந்த தகவலையும் தற்போது கூற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 5
சினிமாபொழுதுபோக்கு

மணிரத்னம் படத்தில் நடிக்கக் கையை வெட்டவும் தயார்: நடிகை பிரியாமணி உருக்கமான கருத்து! 

பிரபல நடிகை பிரியாமணி, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதற்காகத் தனது...

4a0863b31f2176412487ed4e6877a71517618271634881270 original
சினிமாபொழுதுபோக்கு

சியான் 63: விக்ரமின் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்குகிறார்!

எப்போதும் சவாலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விக்ரமின் (சியான்) அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ...

25 69059a37b6b5b
சினிமாபொழுதுபோக்கு

கைகுலுக்கியபோது ரசிகர் பிளேடால் கிழித்தார் – 2005ஆம் ஆண்டு சம்பவத்தை பகிர்ந்த நடிகர் அஜித்!

சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அண்மையில்...

25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...