33 ஆயிரம் லீற்றர் டீசலை ஏற்றிச்சென்ற எரிபொருள் தாங்கி விபத்து!

viber image 2022 07 11 10 53 55 399 1

அப்புத்தளை பகுதியில் 33 ஆயிரம் லீற்றர் டீசலை ஏற்றிச்சென்ற எரிபொருள் தாங்கி குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

திருக்கோணமலை ஐ.ஓ.சி. எரிபொருள் முனையத்தில் இருந்து அப்புத்தளைக்கு 33 ஆயிரம் லீற்றர் டீசலை ஏற்றிச்சென்ற எரிபொருள் தாங்கியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

அப்புத்தளை பங்கெட்டிய முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் குறித்த எரிபொருள் தாங்கி வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.

சாரதியில் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து குறித்து அப்புத்தளை பொலிஸார் பூரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்தில் எரிபொருள் தாங்கியில் இருந்த டீசல் முற்றாக வீண்விரயமானதுடன் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

#SriLankaNews

Exit mobile version