பொலிஸ் அதிகாரி வீட்டில் உணவுப் பொருட்கள் திருட்டு!

B shadow fig in front of house 1

பொலிஸ் விசேட பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீட்டுக்குள் பட்ட பகலில் நுழைந்த திருடர்கள், அறையில் வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களை  கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அறைக்குள் வைக்கப்பட்டிருந்த அரிசி, சீனி, பருப்பு, பிஸ்கட் ஆகிய உணவுப் பொருட்களே கொள்ளையிடப்பட்டுள்ளன என கோனாபீனுவல பொலிஸார் தெரிவித்தனர்.

ரன்மெஹரவத்த பகுதியில் வசிக்கும் குறித்த சார்ஜெண்ட்  இந்நாட்களில் அம்பாறையில் கடமையாற்றுகின்றார்.

அவரது மனைவியும் பிள்ளைகளும் வெளியே சென்றிருந்தபோது வீட்டின் ஜன்னலை உடைத்து உள் நுழைந்து,  பொருட்களை கொள்ளையிட்ட பின்னர் அறையை தீயிட்டுவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயினால் அந்த அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

#SriLankaNews

Exit mobile version