கம்பஹா – அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வைத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது பொலிஸார் ஆபத்தான கூரிய ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏழு மற்றும் எட்டு அங்குலம் நீளமாக நான்கு கத்திகள் இதன் போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் பொறுப்பான மூத்த டிஐஜி தேசபந்து தென்னக்கோனுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களின் குற்றங்கள் மற்றும் அவர்கள் யாரைப் பின்தொடர்கிறார்கள் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment