யாழில் தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பப்பெண்கள் உயிரிழப்பு!

யாழ்பாணத்தில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியை பிரபாகரன் பிறேமலதா (வயது 43) என்பவர் கடந்த 08ஆம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் யாழ்ப்பாணம் சென். சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து வந்த நிலையில், சுகவீனம் காரணமாக ஆசிரிய பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுதாகரன் துளசிகா (வயது 28) என்பவர் கடந்த 6ஆம் திகதி தீ காயங்களுடன் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 8ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

6aeaa0b7 51a4 44a1 b315 147954c9f616

#SriLankaNews

Exit mobile version