3 10 scaled
ஏனையவை

கல்லூரியில் புகைபிடிப்பது, மது அருந்துவது எங்கள் உரிமை – மாணவியின் அடாவடி பேச்சு!

Share

கல்லூரி மாணவி ஒருவரின் சர்ச்சை பேச்சு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அரசு ஜாதவிப்பூர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பல்கலைக் கழகத்தில் சில நாட்களுக்கு முன் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மிகவும் மோசமாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் கண்டங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.

அந்த மாணவி பேசியதாவது ‘பல்கலைக் கழகம் எங்களுக்கு 2 ஆவது வீட்டைப் போன்றது. அதன் அடிப்படையில் இந்த வளாகத்தில் எங்களுக்கு புகை பிடிக்கவும், மது குடிக்கவும் உரிமை உண்டு.

இதற்காக நாங்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. இது எங்களுடைய உரிமை’ என்று அந்த மாணவி பேசியுள்ளார். அந்த மாணவியின் பேச்சை நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...