2 10
ஏனையவை

திரில்லர் இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்.. முதல் முறையாக இணையும் கூட்டணி

Share

திரில்லர் இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்.. முதல் முறையாக இணையும் கூட்டணி

தனுஷ் கைவசம் தற்போது குபேரா, ராயன் மற்றும் இளையராஜா ஆகிய படங்கள் உள்ளன. இதன்பின் அவர் யாருடன் கைகோர்க்க போகிறார் என தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த நம் அனைவரையும் அசரவைத்த திரைப்படம் போர் தொழில். அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படம் அறிமுக இயக்குனரான விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியிருந்தார். போர் தொழில் படத்தை தொடர்ந்து மீண்டும் இவர் அசோக் செல்வனை வைத்து படம் இயக்கி வருகிறார் என கூறப்பட்ட நிலையில், தற்போது தனுஷுடன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. தன் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு விக்னேஷ் ராஜா படத்தில் தனுஷ் நடிப்பாராம். பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகப்போகிறது என்று

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...