விளையாட்டுகுற்றம்

தனது தவறை ஒப்புக் கொண்டார் டென்னிஸ் நட்சத்திரம்

Share
eqt1r6no djokovic
Share

நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் போது தாம் பொய்யான தகவல்களை ஆவணங்களில் பதிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

நோவாக் ஜோகோவிச் தாம் பிழை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

208218 novak djokovic

சமூக ஊடகங்களின் ஊடாக ஜோகோவிச் இட்டுள்ள பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

தமது பயண விண்ணப்பத்தை பூர்த்தி செய்த முகவர் உண்மையான தகவல்களை வழங்கத் தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக மேற்கொண்ட பயணங்கள் பற்றிய விபரங்கள் பொய்யானவை என இதன்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கு 14 நாட்களுக்குள் எந்தவொரு நாட்டுக்கும் பயணிக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்ய முன்னர் சேர்பியா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கு ஜோகோவிச் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது முகவர் விண்ணப்பத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பிழையான கூட்டில் (வெளிநாட்டு பயணம் பற்றி கேட்கப்பட்டிருந்த கேள்வி) டிக் செய்து விட்டதாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

இது ஓர் மனிதத் தவறு எனவும் அதற்காக முகவர் தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகோவிச்சை நாடு கடத்துவது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

#sportsnews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை
இலங்கைசெய்திகள்விளையாட்டு

ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை

ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள...

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை
இலங்கைகுற்றம்செய்திகள்

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை சாரதிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது மற்றும் அளவுக்கு...

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு
இலங்கைசெய்திகள்விளையாட்டு

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு கடந்த ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி.யின்...

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!
உலகம்உலகம்குற்றம்செய்திகள்

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..! இன்று குழந்தைகள் முதற்கொண்டு முதியோர்கள்...