தொட்டீர்கள் என்றால் கெட்டீர்கள் – வாட்ஸ் அப் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை..!

23 649af6ed3f9e6

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி றோஸ் நிற வாட்ஸ் அப்பை தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

பயனர்களுக்கு எச்சரிக்கை

அந்த குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை (link) கிளிக் செய்தால் வாட்ஸ் அப் லோகோ றோஸ் நிறத்திற்கு மாறும் என்றும், அதை தொடர்ந்து வாட்ஸ் அப் பல்வேறு அப்டேட்களைப் பெறும் எனவும் அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டிருக்கும்.

இதை நம்பி அந்த இணைப்பை (link) தொட்டோம், கெட்டோம். அந்த இணைப்பை (link) கிளிக் செய்தால் வரக்கூடிய விபரீதங்களை வெளிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, தெரியாமல் கூட பிங்க் வாட்ஸ்அப்பை தரவிறக்கம் செய்ய வேண்டாம். அவ்வளவு ஏன், தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பை (link) கூட கிளிக் செய்ய வேண்டாமென்று வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version