தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

25 6852cf07dcfea

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக தெங்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை 128,060 ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாராந்திர தேங்காய் ஏல விற்பனையில் அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலை குறித்த விவரங்கள் அதிகாரசபையால் வெளியிடப்படவில்லை.

250 கிலோ கொப்பரை  விலை 115,000 ரூபாய் முதல் 132,500 ரூபாய் வரை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விலை ஏலத்தில் குறைந்திருந்தாலும், சந்தையில் அதன் விலை அதிகரித்துக் காணப்படுவதற்கு இடைத்தரகர்கள் இலாபம் மீட்டுவதே காரணம் என தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது.

ஏலத்தில் 134 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் தேங்காய் ஒன்று நுகர்வோருக்கு 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒரு தேங்காய்க்கு 40 முதல் 50 ரூபாய் வரை இலாபம் ஈட்டுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.

தேங்காய்க்கான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவிக்காததும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என அச் சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி கூறியுள்ளார். தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதன் பலன் நுகர்வோருக்குச் சென்றடைய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version