25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

Share

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக தெங்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை 128,060 ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாராந்திர தேங்காய் ஏல விற்பனையில் அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலை குறித்த விவரங்கள் அதிகாரசபையால் வெளியிடப்படவில்லை.

250 கிலோ கொப்பரை  விலை 115,000 ரூபாய் முதல் 132,500 ரூபாய் வரை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விலை ஏலத்தில் குறைந்திருந்தாலும், சந்தையில் அதன் விலை அதிகரித்துக் காணப்படுவதற்கு இடைத்தரகர்கள் இலாபம் மீட்டுவதே காரணம் என தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது.

ஏலத்தில் 134 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் தேங்காய் ஒன்று நுகர்வோருக்கு 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒரு தேங்காய்க்கு 40 முதல் 50 ரூபாய் வரை இலாபம் ஈட்டுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.

தேங்காய்க்கான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவிக்காததும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என அச் சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி கூறியுள்ளார். தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதன் பலன் நுகர்வோருக்குச் சென்றடைய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...