24 665e0aff763f6
ஏனையவை

புகழின் உச்சிக்கு சென்றதும் திமிரா? கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணும் லிங்குசாமி! இழுத்தடிக்கும் சூரி

Share

புகழின் உச்சிக்கு சென்றதும் திமிரா? கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணும் லிங்குசாமி! இழுத்தடிக்கும் சூரி

தமிழ் சினிமாவில் தற்போது பெரும்பாலானோரின் கவனத்தைப் பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சீரியல் நடிகராக இருந்து அதற்கு பின்பு காமெடி நடிகராக, தற்போது தனது விடாமுயற்சியின் காரணமாக கதையின் நாயகனாக உருமாறி உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலைப் படம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த படத்தில் தனது உடலை வருத்தி மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார் சூரி. அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த பலனாக அந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நாயனாக நடிக்க சூரிக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சூரி. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இதிலும் நடிகர் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி தற்போது சூரியை வைத்து படமெடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் லிங்குசாமிக்கு கால்சீட் கொடுக்க சூரி இழுத்தடித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு காரணம் அவர் சூரியை வைத்து காமெடி படம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். மீண்டும் காமெடி டிராக்டில் போக வேண்டாம் என சூரி யோசிப்பதனால் அவர் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...