எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஆரம்பக்கட்டணத்தை 25 ரூபா ஆக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதற்கான அனுமதியை போக்குவரத்து அமைச்சு வழங்கவில்லை.
#SriLankaNews