ஏனையவை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் ஊடாக பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

Share
3 25
Share

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் ஊடாக பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை, அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக வழங்கும் புதிய முயற்சியை அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார், அவுஸ்திரேலிய – மெல்போர்ன் கனடா – டொராண்டோ, இத்தாலி – மிலன் மற்றும் டுபாய் தூதரகங்கள் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தூதரங்களில் இந்த திட்டம் ஒரு முன்னோடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக, இலங்கையில், பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் ‘e-BMD’ என்ற மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு தரவுத்தள அமைப்பை, மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம், இலங்கை முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்களில் சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதிரியைப் பின்பற்றி, வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்க இந்த திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில், ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்டு இ-பிஎம்டி அமைப்பில் சேமிக்கப்பட்ட சுமார் 45 மில்லியன் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும்.

அத்துடன், 1960 ஜனவரி முதலாம் திகதி முதல் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகள், திருமணம் மற்றும் இறப்புகளுக்கான பதிவுகள் இதில் அடங்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...