கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கர்நாடகாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் நேற்று துணிகளை துவைக்க வந்த சிலர் அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் பொலிசாருக்கு உடனடி தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பாட்டில்களை கைப்பற்றி அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்தார்.
இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#IndiaNews
Leave a comment