3 1 6
ஏனையவை

அதிகாரத்தை பெறவே மக்களுக்கு வாக்குறுதி! அநுர அரசை சாடிய சஜித் தரப்பு

Share

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதற்காகவே நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் இன்று(18) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் வழங்கிய இந்த ஆணையை ஐக்கிய மக்கள் சக்தி மதிக்கிறது. தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்மட்டத்திற்கு கொண்டு வந்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதே எதிர்க்கட்சியின் முதன்மை பணியாகும்.

நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லவோ, நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கவோ, அல்லது குறுகிய அரசியல் நலன்களின் அடிப்படையில் செயல்படவோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயல்படாது.

ஆனால் அரசாங்கம் தவறான பாதையில் செல்லும் போது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.

கடன்களை செலுத்தும் இயலுமையை அதிகரிப்பது, வருமான மூலங்களை அதிகரிப்பது, உற்பத்தியை அதிகரிப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது, கல்வியை மேம்படுத்துவது, விவசாயத்தை மேம்படுத்துவது, பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது, வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கான தீர்வுகள் ஜனநாயகம் பாதுகாக்கப்படல் போன்ற விடயங்களில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறே, ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த ஆணையை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்குப் பதிலாக தனியொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

எனவே தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கினர்.

தமக்கு கிடைத்த கூடிய அதிகாரத்தை முறையாக செயல்படுத்தி மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரச நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

விமர்சனங்களுக்கு அப்பால் சென்று, பாராளுமன்ற குழுக்களில் பங்களித்து, வலதுசாரி முகாமின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டு, ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாத்து, பாராளுமன்றத்தில் அவர்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவோம். ”என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...