24 67495625a14ce scaled
ஏனையவை

மாவடிப்பள்ளியின் பெறுந்துயர் : வெள்ளைக் கொடி கட்டி துக்கம் அனுஷ்டிப்பு!

Share

வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் (Nintavur) காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் முழு நேரமாக கல்வி கற்று வந்த அனைத்து மத்ரசா மாணவர்களுக்கும் கால நிலை சீற்றத்தின் காரணமாக கடந்த 26-11-2024 செவ்வாய்க்கிழமை மாலை விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் சம்மாந்துறை (Sammanthurai) பகுதியை சேர்ந்த மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவு மாவடிப்பள்ளி (Karaitivu) பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தில் அகப்பட்டு மரணமடைந்த சம்பவமானது முழு நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

உழவு இயந்திர விபத்தில் பலியான மத்ரஸா மாணவர்கள்: நான்கு சந்தேகநபர்கள் கைது!
உழவு இயந்திர விபத்தில் பலியான மத்ரஸா மாணவர்கள்: நான்கு சந்தேகநபர்கள் கைது!
துக்கதினம் அனுஸ்டிப்பு
இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களுக்காக அம்பாறை (Ampara) மாவட்டம் நிந்தவூர், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை,பகுதிகளில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கக் கூடிய அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் இன்றையதினம் (29.11.2024) குத்பாக்களிலும் ஷஹீதுகளுடைய அந்தஸ்து தொடர்பாக குத்பா உரை நிகழ்த்தப்பட இருப்பதுடன் ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து மரணமடைந்த மாணவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடாத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 1 2
ஏனையவை

யாழ் – பண்ணைக் கடலில் சோகம்: நீராடச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் இன்று (டிசம்பர் 7) மாலை நீராடச் சென்ற கொக்குவில்...

DSC 4424
ஏனையவை

சிவனொளிபாதமலைக்கு ஹட்டன் வழியாகப் பிரவேசிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

சீரற்ற காலநிலை காரணமாக, சிவனொளிபாத மலைக்கு (Sri Pada/Adam’s Peak) செல்வதற்கான ஹட்டன் அணுகல் வீதியிலுள்ள...

images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...