24 66665d0c8bfc0
ஏனையவை

இரகசியமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களினால் அரசாங்கத்திற்கு நட்டம்

Share

இரகசியமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களினால் அரசாங்கத்திற்கு நட்டம்

இறக்குமதி செய்யப்பட்ட 400 சொகுசு வாகனங்களில் 06 வாகனங்கள் இரகசியமாக கடத்தப்பட்டு பொய்யான தகவல்களை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்ட வாகனங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 168 சொகுசு வாகனங்களை இரகசியமாக இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 700 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இந்த தகவலின் பிரகாரம் குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

4 முதல் 6 கோடி ரூபா பெறுமதியான Montero, Landcruiser, சொகுசு வாகனங்கள் மற்றும் Nissan ரக சொகுசு வாகனங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கைக்குள் 400 சொகுசு வாகனங்கள் கடத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே விடுத்த கோரிக்கைக்கு இணங்க வாகனங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...