தந்தையின் புல்வெட்டி இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலி !

child dead

தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயதான குழந்தை ஒன்று பலியாகியுள்ளது .

இந்த சம்பவம் .நேற்றையதினம் (27) பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றுள்ள குழந்தை அந்த இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக இயந்திரத்தை செலுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் .

இது தொடர்பான விசாரணைகளும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

Exit mobile version