1 18
இலங்கைஏனையவைசெய்திகள்

கனேடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி விடுத்த முக்கிய கோரிக்கை

Share

கனேடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி விடுத்த முக்கிய கோரிக்கை

குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

கனேடிய (Canada) வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் (Weldon Epp) உள்ளிட்ட கனேடிய அரசியல் தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்றைய தினம் (19.12.2024) கனடா – ஒட்டாவாவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கனேடிய பிரதியமைச்சரிடம் எழுத்துமூல கோரிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையில் , இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாகுவதெனில் அதைப் பின்வரும் மூன்று விதமாகப் படிநிலைப்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தோடும் ஒழுங்கோடும் அணுக வேண்டும் என்பது எமது பார்வையாக உள்ளது.

01) தலையாய சர்வதேசக் குற்றமான இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக்கூறல்

02) இதர சர்வதேசக் குற்றங்களான போர்க்குற்றங்கள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, வலிந்து காணமலாக்கப்பட்டமை ஆகியவை பற்றிய பொறுப்புக்கூறல்

03) மேற்குறித்த குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாது புரையோடிப்போயிருக்கும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை, குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதும் பொறுப்புக்கூறலின் முக்கிய பெறுபேறாக அமையவேண்டும்.

மேற்குறித்த மூன்று முனைகளில் அர்த்தமுள்ளவகையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதிலும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதிலும் பெருந்தொகையாகப் புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடான கனடா நாடானது பின்வரும் வழிகளில் காத்திரமாக உதவவேண்டும் என்று அனைத்து ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் வேண்டி நிற்கிறேன். என குறித்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அண்மைய அறிக்கையின் (A/u/RC/57/19)I உறுப்புரை 68 உபபிரிவு (a) (b) ஆகியவற்றில் பிரேரித்திருப்பவையும் இங்கு நான் முன்வைக்கும் கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் உசாத்துணையாக அமைந்துள்ளன என்பதையும் தங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

இவ்வகையில், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பாக முன்வைக்கும் கோரிக்கைகளாக,

தலையாய பொறுப்புக்கூறலுக்குரிய தமிழ் இன அழிப்புக் குற்றம் தொடர்பான இலங்கையின் அரச பொறுப்பை விசாரணைக்கு உட்படுத்துமாறு உலக நீதிமன்றை அணுகுதல்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கையாளப்படும் இதர குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் உயர் கட்டத் தரமுயர்த்தலை எதிர்வரும் 60 ஆம் கூட்டத் தொடரோடு மேற்கொள்ளுதல்

புதிய அரசியலமைப்பு காத்திரமாக மேற்கொள்ளப்படுவதற்குரிய புதுமையான சர்வதேச மத்தியஸ்துவத்தை ஏற்படுத்த ஆவன செய்தல். போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...